Latest News

December 02, 2011

விரைவில் இணையதளப் பத்திரிக்கை ஆரம்பிக்கிறார் கமல்
by admin - 1

பிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

உலக நாயகன் நடிகர் கமல் தலைமையில் இந்த பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அவரிடம், இணையதளங்கள் திரைப்படத்துறைக்கு எந்த அளவு உறுதுணையாக உள்ளன என்பது குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதிலளித்த கமல், எல்லா மேடைகளிலும் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வரும் என்னிடம் எதற்கு இந்த கேள்வி, நானே விரைவில் இணையதளப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். நான் உங்கள் கட்சி, என்றார்.

அடுத்து ஒரு நிருபர், ரஜினி, நீங்க, பாலிவுட்ல அமிதாப் பச்சன் போன்றவர்கள் எல்லாம் ஓய்வு பெறலாமே, என்றார். அதற்கு கமல் அளித்த பதில் ஏன்.. நீங்கள் எதற்காக வருகிறீர்கள் வயதாகிவிட்டதே என்று நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என்று பதிலளிக்க அத்தோடு நிருபர் அமைதியாகிவிட்டார்.
« PREV
NEXT »

1 comment

மாய உலகம் said...

கமல் அருமையாக பதிலளித்திருக்கிறார்.