Latest News

December 19, 2011

வடகொரிய தலைவர் இறந்துவிட்டதாக இரு நாட்களின் பின்னர் அறிவிப்பு.
by admin - 0

கம்யூனிஸ நாடான வடகொரியாவின் முக்கிய தலைவரான கிம் ஜோங் இல் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளது அந்நாட்டு தொலைக்காட்சி.



ரயில் பயணமொன்றின் போது கிம் ஜோக் இல் அதிக உடல் மற்றும் உள வேலைப்பளுவினால் உயிரிழந்ததாக இரு நாட்களின் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 1994 ஆம் ஆண்டு முதல் வடகொரியாவை ஆட்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறக்கும் போது இவருக்கு வயது 69.

இவரின் இழப்பின் பின்னர் தென் கொரிய இராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
« PREV
NEXT »

No comments