Latest News

December 11, 2011

தமது நாட்டில் டெங்குவை கட்டுப்படுத்த பாகிஸ்தானிய குழு, இலங்கையை வந்தடைந்தது
by admin - 0

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பாகிஸ்தானிய வைத்திய குழு ஒன்று இன்று இலங்கையை வந்தடைந்தது.

இக்குழுவில் சுமார் 60 பேர் வரையில் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையை வந்தடைந்த இக்குழுவினர் நாளை முதல் தொடரந்து 10 நாட்களுக்கு டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான விரிவான விளக்கங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் ஒக்டோபர் மாதம் இலங்கையை சேர்ந்த வைத்திய குழு ஒன்று பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கு சென்று டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான விளக்கங்களை அங்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments