Latest News

December 07, 2011

ஆப்கனிஸ்தானில் குண்டுவெடிப்பு 54 பேர் உடல் சிதறி பலி ஆப்கனில் குண்டுவெடிப்பு 54 பேர் உடல் சிதறி பலி!!
by admin - 0

ஆப்கனிஸ்தானில் நேற்று 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 54 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் காபுலின் முரத் கானி என்ற இடத்தில் உள்ள அபுல் பசல் மசூதியில் நேற்று மொகரம் பண்டிகையை ஒட்டி நூற்றுக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அ

ப்போது நுழைவுவாயிலில் திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித் தது. தகவல் அறிந்த போலீசாரும் பாதுகாப்பு படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், Ôதற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்Õ என்றார்.

நாட்டின் வடபகுதியில் உள்ள மசார் &ஐ&ஷரிப் மசூதியில் மற்றொரு குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் வடபகுதி காவல் துறை செய்தித் தொடர்பாளர் லால் முகம்மது அகமதுஜாய் தெரிவித்தார்.

சைக்கிளில் குண்டுகளை வைத்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்றாவதாக காந்தகார் நகரிலும் ஒரு குண்டு வெடித்துள்ளது. அதில் உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை. இந்த சம்பவங்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே நிலவும் மோதலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாடு ஜெர்மனியின் பான் நகரில் திங்கட்கிழமை நடைபெற்றது.

பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது நேட்டோ படை தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் இந்த மாநாட்டை புறக்கணித்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றுள்ள ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments