கடந்த ஞாயிறன்று பேருந்துகள் அவற்றின் ஓட்டுநர்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரைவை அந்நாட்டரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையிலேயே இவ்விபத்து திங்களன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலையிலிருந்து குறித்த பஸ்ஸில் 29 மாணவர்கள் ஒரு கிராமப்புற வீதி வழியாக தமது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையிலேயே இத்துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அருகிலுள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மாணவர்களின் அழுகுரல் கேட்டு உதவிக்கு விரைந்தனர். தலைகீழாக கவிழ்ந்திருந்த பஸ்ஸின் கீழே சிக்கிய மாணவர்களை வெளியே இழுத்தெடுத்தனர். இம்மாணவர்கள் சுமார் 6 முதல் 14 வயது வரையானவர்களாவர்.
குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ___
No comments
Post a Comment