Latest News

December 08, 2011

11ம் திகதி நள்ளிரவு முதல் மரக்கறி, பழங்களை பிளாஸ்டிக் பெட்டிகளில் ஏற்றிச் செல்வது கட்டாயம்
by admin - 0

வெளி இடங்களில் இருந்து மரக்கறி மற்றும் பழங்கள் ஏற்றிச் செல்லப்படும் போது அவற்றை பிளாஸ்டிக் பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி ஏற்றிச் செல்வது எதிர்வரும் 11ம் திகதி நள்ளிரவு 12 மணியிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.


இதனை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

மரக்கறி மற்றும் பழங்கள் பிளாஸ்டிக் பெட்டிகளில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காலத்திற்கு வர்த்தகர்கள் அதனை பழக்கத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தண்டனைகள் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் 11ம் திகதிக்குப் பின் விதிமுறைகளை மீறினால் கட்டாயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
« PREV
NEXT »

No comments