தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் உன்னிச்சைக் குளம் மற்றும் றூகம் குளம் ஆகியவற்றின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதால் வவுணதீவுப் பிரதேசத்தின் பல வீதிகள் நீரில் முழ்கியுள்ளன.
வவுணதீவு வலையிறவுப் பால வீதியால் சுமார் இரண்டரையடி வரையான நீர் செல்வதால் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்துப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வவுணதீவு மணற்பிட்டி வீதியில் உள்ள வவுணதீவு கட்டாக்கட்டு வீதியும் நீரில் முழ்கியுள்ளதுடன் வவுணதீவு ஆயித்தியமலை வீதியில் முள்ளாமுனை வீதியும் நீரில் முழ்கியுள்ளதால் வவுணதீவு ஆயித்தியமலை வீதிப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
மகிழவெட்டவான் கரவெட்டி வீதியாலும் நீர் பரவிச் செல்வதுடன் வட்டியல், சின்னத்தோட்டம், தில்லந்தோட்டம் ஆகிய கிராம மக்கள் இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
பன்சேனை, பாவற்கொடிச்சேனை, காந்திநகர், புதுமண்டபத்தடி, காஞ்சிரங்குடா, இலுப்படிச்சேனை, நெடியமடு, உன்னிச்சை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் பல வீதிகள் இடிப்பெடுத்து போக்குவரத்துச் செய்யமுடியாதவாறு மாதிக்கப்பட்டுள்ளது
No comments
Post a Comment