Latest News

November 17, 2011

திருச்செந்தூர் கடல் நீர் சிவப்பானது (படங்கள்)
by admin - 0

திருச்செந்தூர் கடல் தண்ணீர் இன்று மதியம் திடீரென சிவப்பு நிறமாக மாறியதையடுத்து, அங்கே நீராடுவதற்காக வந்த பக்தர்கள் பரபரப்படைந்தனர். அதில், ஆலயம் செல்வதற்காக நீராடிவிட்டு வந்த பக்தர் ஒருவர், கடல் தண்ணீர் திடீரென சிவப்பாக மாறியது எப்படி என்று தெரியவில்லை. ஆனால், குளித்த முடித்தப் பின்னர், உடலில் ஏதோ அரிப்பு காணப்படுகிறது. கழிவு நீர் கலந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அங்கே உள்ள உள்ளூர் வாசிகளிடம் விசாரித்தப்போது, இந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மழைக்காலங்களில் பக்கத்தில் உள்ள ஆலைகளின் கழிவு நீர், மழை நீரோடு கடலில் கலந்து விடுவதால், கரையோரப் பகுதிகளில் தண்ணீர் நிறம் சிவப்பாக மாறிவிடும். குன்னக்காயல் கடற்கரையில் இருந்து பெரியதாழை வரையிலான சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவு கடல் தண்ணீர் சிவப்பாக மாறிவிடுவது வழக்கம். இதை அரசு தான் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள்.





http://www.earnparttimejobs.com/index.php?id=3768172
« PREV
NEXT »

No comments