Latest News

November 11, 2011

சூப்பர் ஸ்டார் ஆகும் அஜித்!
by admin - 0

பில்லா 2 படத்தை தொடங்கினாலும் தொடங்கினார்கள், எங்கும் இந்த பார்ட் டூ மயம்தான். பாட்ஷா வரை பாய்ந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அ‌‌ஜீத் ஏ.எம்.ரத்னத்துக்காக ஒரு படம் நடிக்கிறார். இயக்குனர், கதை எதுவும் முடிவாகவில்லை. அதற்குள் இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர், அ‌‌ஜீத் காம்பினேஷனில் ரத்னம் எடுக்கிறார் என்று எழுதினார்கள். அதன் பிறகுதான் ரத்னத்தின் பல்பு எ‌ரிந்தது. அட இதுவும் நல்லாயிருக்கே என்று அதே ரூட்டில் கொஞ்சம் தூரம் போய் பார்த்தார்.

இப்போது பாட்ஷா இரண்டாம் பாகத்தில்தான் அ‌‌ஜீத் நடிக்கப் போகிறார் என்று ஜோசியம் சொல்கிறார்கள். போகிற போக்கில் சொல்லும் சில சில்வண்டு விஷயங்கள் நடந்துவிடுவதால் இதை அப்படியே விடவும் முடியாது, நம்பவும் முடியாது.

இப்போதைக்கு பாட்ஷா இரண்டாம் பாகம் என்பது ஃபைலில் இருக்கிறது. படப்பிடிப்புக்கு வந்தால்... நல்லாதான் இருக்கும்.


« PREV
NEXT »

No comments