இலங்கையில் உள்ள பிரித்தானிய எல்லை முகவர் நிலைய குற்ற விசாரணை திணைக்களத்தினர் இவ்விருவரையும் கைது செய்துள்ளளனர்.
இவ்விருவரும் போலியான தகவல்களை சமர்பித்ததால் எதிர்வரும் 10 வருடங்களுக்கு பிரித்தானியா செல்ல முடியாது என்பதோடு சட்ட நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
சட்டவிதிகளை மீறி பிரித்தானியாவிற்குள் செல்ல யாரையும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரித்தானிய எல்லை முகவர் நிலையத்தின் பணிப்பாளர் கிளயாரி முர்ரே குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தயவு செய்து போலியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதமும் போலி விண்ணப்பங்களை சமர்பித்து பிரித்தானிய விசா பெற முயன்ற இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment