Latest News

November 19, 2011

கடாபியின் மகன் சயிப் கைது
by admin - 0

லிபிய ஜனாதிபதி கடாபியின் மகன் சயிப் அப் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தகவலை அந்நாட்டு இடைக்கால அரசின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.சயிஃப் அல் இஸ்லாம் ஒரு மாதத்துக்கு முன்னர் நேட்டோ தாக்குதலில் காயமடைந்ததாக தகவல்


39 வயதான, ஒரு பொறியியலாரான சயிஃப் அல் இஸ்லாம், கடாஃபியின் அணு ஆயுதத்திட்டத்தை கைவிடச் செய்த பேச்சுவார்த்தைகளிலும் அதன்பின்னர், லிபிய மருத்துவமனையொன்றில் சிறார்களுக்கு எச்.ஐ.வி கிருமிகளைத் தொற்றச் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பல்கேரி்ய மருத்துவர்கள் ஆறுபேரின் விடுதலைக்கான பேச்சுக்களிலும் முக்கிய பங்குவகித்திருந்தார். லிபிய கிளர்ச்சியின் பின்னர் சய்ஃப் அல்-இஸ்லாம் மீதான மேற்குலகின் பார்வை வேறுவிதமாக படியத்தொடங்கி விட்டது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இறுதிவரைப் போராடப் போவதாக ஆத்திரம் பொங்க சூளுரைத்திருந்த இவர், கிளர்ச்சியாளர்களை குடிகாரர்கள் என்றும் காடையர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கூட வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதமளவில் நேட்டோ தனது தாக்குதலை தொடங்கலாமா இல்லையா என்று ஆலோசித்துக்கொண்டிருந்த போது, எல்லா பகைகளையும் தம்மால் முறியடித்துவிடமுடியும் என்று சய்ஃப் அல்-இஸ்லாம் முழங்கினார்.
ஒரு கட்டத்தில் சய்ஃப் அல்-இஸ்லாமை பிடித்துவிட்டோம் என்று கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
ஆனால் மறுகணமே, திரிப்போலியில் சர்வதேச ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே தோன்றிய அவர், அந்த நிலையிலும் வெற்றி நமதே என்று நம்பிக்கையோடு கோசமிட்டுவிட்டுச் சென்றிருந்தார்.

லிபியாவின் தெற்கு பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடாபியின் மகன்களில் அதிக அதிகாரம் கொண்ட ஒருவராகக் கருதப்பட்ட சயிப் லிபியாவை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக ஆரம்பத்தில் நம்பப்பட்டது.

இவர் சர்வதேச நீதிமன்றத்தில் சரணடையலாம் எனவும் ஆரம்பத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments