தேயிலையின் அளவு இரண்டு புள்ளி இரண்டு ஆறு சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மொத்தமாக 276.15 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இதுவே இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மொத்தமாக 269.89 மில்லியன் கிலோ என 2.26 சதவீதம் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 27.88 மில்லியன் கிலோ தேயிலை இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது. இதுவே இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 23.69 மில்லியன் கிலோ என 15 சதவீதம் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய வீழ்ச்சிக்கு இலங்கை தேயிலை உற்பத்தியில் காணப்பட்ட பாதகமான கால நிலையே காரணம் என இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் ஹேமரத்ன (H.D. Hemarathna) தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், கடந்த ஆண்டின் சாதனையான 331.4 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தியினை, இந்த ஆண்டின் முடிவிற்குள் எட்டிவிட முடியும் என தேயிலை சபை எதிர் பார்த்துள்ளது.
இதனால், இந்த ஆண்டின் தேயிலை ஏற்றுமதி மூலம் 1.5 பில்லியன் ஐ.அ.டொலர் வருமானத்தை இலங்கை தேயிலை சபை எதிர் பார்த்துள்ளது.
No comments
Post a Comment