வவுனியா கூமாங்குளம் காளிகோயில் வீதியை வசிப்பி டமாகக் கொண்ட 3 வயதுக் குழந்தையின் வைத்தியச் செலவுக்காக உதவிகள் கோரப்பட்டுள்ளன.சிவபாலன் தேவதர்சினி என்னும் பெயருடைய இந்தக் குழந்தையின் கண்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே ஒரு கண் அகற்றப்பட்டுள்ளது. அடுத்த கண்ணுக்கும் இந்த நோய் பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தற்போது இந்தச் சிறுமி கொழும்பு கண் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.தொடர்ந்து கொழும்பு சென்று சிகிச்சையளிப்பதற்கான பொருளாதார வசதி இந்தக் குழந்தையின் குடும்பத்தவரிடம் இல்லாததால் ஏனையோரின் நிதியுத வியை நாடியுள்ளனர்.
இவர்களது குடும்ப நிலைமை தொடர்பாக கூமாங்குளம் கிராம அலுவலரும், வவுனியாப் பிரதேச செயலரும் உறுதிப் படுத்தியுள்ளனர்.இந்தக் குழந்தையின் வைத் தியச் செலவுகளுக்கு நிதியுதவியை வழங்குவதற்கு விரும்புபவர்கள் வவுனியா வர்த்தக வங்கியிலுள்ள 8610012872 என்னும் கணக்கு இலக்கத்துக்குத் தமது உதவிகளை அனுப்பி வைக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comment
Tell them to call me i can help 006421028 38934
Post a Comment