Latest News

November 08, 2011

இயற்கைப் பசளை என்ற பெயரில் பிண்ணாக்கு விற்று வந்த பலே பேர்வழி
by admin - 0

செடிகளைச் சேதப்படுத்தும் புழுக்களை அழிக்கக் கூடிய நாசினி எனக் கூறி ஏமாற்றி பிண்ணாக்கை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொரலஸ்கமுவ பொலிசார் தெரிவித்தனர்.


இவர், பிண்ணாக்கை உருண்டைகளாக்கி பைக்கற்றுக்களில் அடைத்து வர்த்தக பெயரொன்றையும் அச்சிட்டு, வான் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார். பைக்கற் ஒன்று 225 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டள்ளது.


இவரைக் கைது செய்யும் போது வானில் இருந்து 686 'பசளை'ப் பைக்கற்றுகளும், மூன்று சாக்கு பிண்ணாக்கும் கைப்பற்றப்பட்டன என்று பொலிசார் கூறுகின்றனர்.


இந்தப் பசளைப் பைக்கற்றுக்களில் பொறிக்கப்பட்டிருந்த நிறுவன முகவரிக்கு பொலிசார் சென்றபோது அந்த இடத்தில் சைக்கிள்களைப் பழுது பார்க்கும் கடையொன்றே இருந்துள்ளது. எனினும், சைக்கிள் கடைக்காரருக்கும் கைது செய்யப்பட்டவரக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
« PREV
NEXT »

No comments