Latest News

November 12, 2011

இஸ்ரேல் முன்னாள் அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
by admin - 0

இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோஷி கத்சாவ்(65). இவர் பதவியில் இருந்த போது தனது பெண் உதவியாளரை கற்பழித்ததாகவும், மேலும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மீது கடந்த 2009ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 18 மாதங்கள் நடந்த விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கத்சாவ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். தனது பெண் உதவியாளரை கற்பழிக்கவில்லை என்றும், தங்களுக்கு இடையே காதல் இருந்ததாகவும் கூறி 246 பக்க மறுப்பு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.ஆனால் அவரது மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நிராகரித்தார். மேலும், கீழ் கோர்ட்டு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தார்.அவர் அடுத்த மாதம்(டிசம்பர்) 7ந் திகதி முதல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

« PREV
NEXT »

No comments