Latest News

November 07, 2011

ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் பலி
by admin - 0

ஆப்கானிஸ்தானில் பக்ரீத் பண்டிகை தொழுகையை முடித்து விட்டு மசூதியிலிருந்து வெளியேறியவர்கள் மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர். இதில் இதில் 7 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் பாகியான் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்து பக்தர்கள் மசூதியில் இருந்து வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் தற்கொலைப் படையை சேர்ந்த 2 பேர் நுழைந்தனர்.

இதில் ஒருவர் தனது இடுப்பில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். இதில் அப்துல் என்ற போலீஸ்காரர் உட்பட 7 பேர் இறந்தனர். 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்னொரு நபர் வெடிகுண்டை வெடிக்க செய்ய முயற்சியில் ஈடுபட்டபோது பிடிப்பட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள், அதே பகுதியில் உள்ள ஹாசன்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
« PREV
NEXT »

No comments