திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்ததால். நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நொய்யல் ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக திருப்பூர் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் மாயமானவர்கள் கதி?
ஜம்மனை பாலம் அருகில் இருந்த குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. காங்கேயம்ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் நொய்யல் ஆற்றின் கரைகளில் குடிசை அமைத்திருந்தவர்கள் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
சுகுமார் நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கணவன் மனைவி, மூன்று குழந்தைகள் என அவர்கள் 5 பேரும் வெள்ள நீரில் இருந்து தப்பிக்க வீட்டின் மேல்பகுதி ஓடுகளின் மீது காலை 3 மணி அளவில் ஏறி நின்றுள்ளனர். அப்போது வெள்ளநீர் அவர்கள் அனைவரையும் அடித்துச்சென்றது. இவர்களில் யாரும் உயிர்பிழைக்கவில்லை.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினரும் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 14 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பலரது உடமைகள் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டதால் ஏராளமானோர் கவலையடைந்துள்ளனர். கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக குலாலர் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திடீர் வெள்ளத்தாலும், கன மழையாலும் திருப்பூர் நகரமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
200 ஆடுகள் அடித்துச்செல்லப்பட்டன
சத்ய நகர் பகுதி மக்கள் பக்ரித் பண்டிகை கொண்டாடுவதற்காக சந்தையில் இருந்து ஆடுகளை வாங்கிவந்து கட்டி வைத்திருந்தனர். இதில் 200 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
வளர்மதி பாலம், கருவம்பாளையம் டைமண்ட் தியேட்டர் அருகில் உள்ள நொய்யல் ஆற்றுப்பாலத்தையும் தாண்டி வெள்ளநீர் செல்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீசக்தி தியேட்டர் அருகில் உள்ள பாலம் உடைந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆற்றை தூர்வாரவேண்டும்
ஆற்றின் பாதைகளில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பே இந்த வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு பகலில் வெள்ளம் ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்த முறை நள்ளிரவில் வெள்ளம் ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக திருப்பூர் நகரமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நொய்யல் ஆற்றில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரிக்க வாய்ப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையினால் நொய்யல் ஆற்றில் வெள்ளநீர் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரே நாளில் 26 செ.மீ மழை பெய்ததே காரணம்
இந்த திடீர் வெள்ளம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன் கூறுகையில்,
திருப்பூரில் ஒரே நாளில் 26 சென்டிமீட்டர் மழை பெய்ததே பெரும் வெள்ளத்திற்கும், மக்களின் சிரமத்திற்கும் காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் திருப்பூர் மாவட்டத்தில் செவ்வாய்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நொய்யல் ஆற்றுக் கரையோரங்களை விட்டு அகலுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments
Post a Comment