Latest News

November 05, 2011

மகனையே கடத்தி 5 லட்சம் பணம் கோரிய பெற்றோர்கள்
by admin - 0

இலங்கை கொஸ்வத்தை பிரதேசத்தில் கத்தோலிக்க மதகுரு ஒருவர் வளர்த்து வந்த 15 வயது சிறுவனை கடத்திச் சென்று, 5 லட்சம் ரூபா கப்பம் கோரிய சிறுவனின் பெற்றோரை கொஸ்வத்தை பொலிஸார் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர். 

கடத்தப்பட்ட சிறுவன் மாரவில பிரதேசத்தில் வைத்து கப்பம் கேட்கப்பட்ட பணம் வழங்கப்படும் சந்தர்ப்பத்திலேயே பெற்றோர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பெற்றோரின் விருப்பத்திற்கு அமையவே கத்தோலிக்க மதகுரு குறித்த சிறுவனை வளர்த்து வந்தாகவும் சிறுவன் தந்தை சாரதியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

நவம்பர் முதலாம் திகதி இந்த சிறுவனை இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பெற்றோர்கள் இன்று மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
« PREV
NEXT »

No comments