Latest News

November 20, 2011

பல்கலைக்கழகங்களில் 1200 ஆசிரியர்கள் பற்றாக்குறை
by admin - 0

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு 1200 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண இன்று தெரிவித்தார்.
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற சுமார் 500 பல்கலைக்கழக ஆசிரியர்கள் மீண்டும் நாடு திரும்பவில்லை எனவும் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில நாளிதழான டெய்லி மிரருக்கு கலாநிதி நவரட்ண கூறினார்.
இதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் சராசரியாக 25 சதவீதமானோர் மாத்திரமே கலாநிதி பட்டம்பெற்றவர்களாக உள்ள நிலையிலேயே இலங்கைப் பல்கலைக்கழகங்கள் இயங்கிக்கொண்டிருப்பதாக பல்கலைக்கழக ஆசியர்கள் சம்மேளனத்தின் பேச்சாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் தெரிவித்தார்.
ஏனயை நாடுகளிலுள்ள சர்வதேச ரீதியாக தரப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் கலாநிதி பட்டம் பெறாத எவரும் விரிவுரையாளராக சேர்கக்ப்படுவதில்லை எனவும் மஹிம் மெண்டிஸ் தெரிவித்தார்.
உலகின் தலைசிறந்த 30 பல்கலைக்கழங்களில் நான்கு பல்கலைக்கழகங்கள் மாத்திரமே ஆசியாவைச் சேர்ந்தவை எனவும் அவர் தெரிவித்தார்

« PREV
NEXT »

No comments