Latest News

October 23, 2011

கடாஃபியின் பெண் பாடிகார்டுகள் எங்கே?!
by admin - 0

நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கர்னல் மம்மர் கடாபி, தனது பாதுகாவலர்களாக பெண் பாடிகார்டுகளை நியமித்திருந்தார்.

இவர்களை வெற்றியின் அடையாளமாக அவர் குறிப்பிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எப்போதுமே பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள் இல்லை. காரணம் உடல் அமைப்பும் தன்மையும் வேறு என்று குறிப்பிட்டு வந்த கடாபி, இந்த பெண் பாடிகார்டுகள் விஷயத்தில் மட்டும் மிகவும் தாராளம் காட்டி வந்தார்.

அவரது அரசில் பணியாற்றியவர்களில் இந்தப் பெண்களே உயர்ந்தபட்ச பதவி வகித்தவர்களாக கருத்தப்பட்டனர். அதற்கு அவர் பெண்களைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீல நிற சீருடை, நகச்சாயம், ஹை ஹீல்ஸ் செருப்பு, மெஷின் கன் சகிதம் இவர்கள் கடாபிக்கு பாதுகாவலர்களாக இருந்தனர்.

கடாபி கொல்லப்பட்டுவிட்ட நிலையில் இவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
« PREV
NEXT »

No comments