Latest News

October 23, 2011

கொல்லப்படுவதற்கு முன்பு 'தம்'மடித்த கடாபியின் மகன்
by admin - 0

: புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் முத்தாசிம் கடாபியையும் புரட்சிப் படை சுட்டுக் கொன்றது. சிறை பிடித்து பின்னர் அவரைக் கொன்றனர். கொல்லப்படுவதற்கு முன்பு முத்தாசிம் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்துள்ளார். சிகரெட் பிடித்தபடியும், தண்ணீர் பிடித்தபடியும் அவர் காணப்படுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

லிபிய முன்னாள் அதிபர் கடாபி தனது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து புரட்சிப்படையால் கடந்த 20ம் தேதி சுட்டுக்கொல்லபப்ட்டார். அதே நாளில் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த கடாபியின் மகன் முத்தாசிம் கடாபியையும் புரட்சிப் படை பிடித்து சுட்டுக் கொன்றது.

கடாபியை புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தியபோது அதில் இடம் பெற்றிருந்த முத்தாசிம் காயத்துடன் பிடிபட்டார். பின்னர் அவரை ஒரு இடத்தில் சிறை வைத்துள்ளனர். அவருக்கு காவலாக ஆயுதம் ஏந்தியவர்கள் நிற்பது போன்ற ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடிப்பது போலவும், சிகரெட் புகைப்பது போலவும், படுக்கையில் படுத்தபடி தனது காயத்தைப் பார்ப்பது போலவும் அந்தக் காட்சிகள் உள்ளன. பின்னர் அவரது இறந்த உடல் காட்டப்படுகிறது. அதில் நெஞ்சில் குண்டுக்காயம் காணப்படுகிறது.

இந்த நிலையில் கடாபி மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஐ. நா. உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடாபி போன்ற கொடுங்கோலர்கள் மரணம் நல்ல விஷயம்தான் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஏற்கனவே வரவேற்றுள்ளதால் இந்த விசாரணை ஒரு உப்புக்குச் சப்பாணியாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments