Latest News

October 22, 2011

கடாபியை அடித்துக்கொன்று தெருவில் இழுத்து சென்றனர்:கடைசி நிமிடங்கள் (full video).NEW VIDEO
by admin - 0



கிளர்ச்சிப் படையினர் கடாபி தங்கியிருந்த அவரது சொந்த ஊரான சேர்ட்டேவை நேற்றைய தினம் முற்றுகையிட்டனர். இதனிடையே நேட்டோப் படையினர் தமது வேவு பார்த்தலை அதிகரித்து கடாபி அந் நகரில் இருப்பதை உறுதிசெய்துகொண்டனர். கிளர்ச்சிப்படையினர் தாக்குதலை தொடுத்தவேளை அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரது வாகனத் தொடரணி மீது நேட்டோப் படையின் ஆளில்லா விமானங்களும் ஜெட் விமானங்களும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக 5 வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக நேட்டொப் படைப்பிரிவுக்கு செய்தி கிட்டியபோதிலும் அந்த வாகனத் தொடரணியில் எந்த வாகனத்தில் கடாபி இருக்கிறார் என்பதும் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களை துல்லியமாகத் தாக்கியழித்துள்ளது நேட்டோப் படை. இதனால் அவர் வாகனம் மட்டும் பலத்த சேதமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பாளரும் சாரதியும் வாகனத்தை திருப்பி மறைவான ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளனர். அதனையும் வேவுபார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கடாபி வீதி ஓரமாக இருக்கும் ஒரு சுரங்கக் குழிக்குள் இருக்கிறார் என்ற தகவலை தலைமைக்கு பரிமாற அவ்விடம் நோக்கி கிளர்ச்சிப்படையினர் நகர்ந்துள்ளனர். காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பதுங்கியிருந்த அவரை வெளியே இழுத்து சேட்டைக் களற்றி நிர்வாணமாக்கி அவரைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அடித்து முதலில் மானபந்தப் படுத்தியுள்ளனர் கிளர்சியாளர்கள். பின்னர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுட்டுள்ளனர்.ஆனால் கடாபி தன்னைச் சுடவேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார். நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடாபியின் மன்களில் 2வர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காலில் சிறு காயங்களோடு பிடிபட்டார் என முதலில் அறிவித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அதேபோல மற்றைய மகனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் பின்னரே அவர் உடலை ஒரு அம்பூலன்ஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால் மேற்குலக தொலைக்காட்சிகள் கடாபி காயங்களுடன் பிடிபட்டதாகவும் அவருக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தப் பெருக்கு காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் கதைகளைக் கட்டியது. ஏதோ மனிதநேயம் மிக்க ஒரு நடவடிக்கையை தமது நேட்டோப் படைப்பிரிவு செய்ததாக இவர்கள் நினைப்பது அடி முட்டாள் தனமாகும். அமெரிக்காவின் திட்டப்படி கடாபியை தனிமைப்படுத்தி அவருக்கு மரணபயத்தைக் காட்டி யாரும் இல்லாத நிலையில் வீதியில் ஓடவிட்டு பின்னர் ஒரு மறைவிடத்தை அவர் தேடிய பின்னர் சினிமாப்பட பாணியில் அவரைக் கொண்றுள்ளனர் கிளர்சிப் படையினர். கடாபிக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் என்ன வித்தியாசம் ?

இதில் வேதனையான விடையம் என்னவென்றால் சரணடைந்த கடாபியின் வாகன ஓட்டுனரை முதலில் கைகளைக் கட்டி வாகனத்தில் ஏற்றிவிட்டு(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் அவர் இறந்துவிட்டார் எனவும் கிளர்ச்சிப் படையினரும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. இது இலங்கை இராணுவத்தின் அட்டூளியங்களுக்கு ஒப்பான ஒரு செயலாக நோக்கப்படவேண்டி உள்ளது. கடாபி பல குற்றங்களை இழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரை கண்ட இடத்தில் சுட்டுக் கொலைசெய்ய கிளர்ச்சியாளர்களுக்கு என்ன அருகதை உள்ளது ? அவரை இலகுவாகப் பிடித்து நீதிமன்றின் முன் நிறுத்தியிருக்கலாம். அப்படி அவர்கள் நிறுத்தியிருந்தால் கிளர்ச்சிக்காரர்கள் மரியாதை சற்று உயர்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அவசரப் போக்கு மிக ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக பென்காசி என்னும் நகரில் உள்ளவர்கள் தாமே முதலில் புரட்சியை ஆரம்பித்ததால் நாட்டை ஆளும் பொறுப்பு தம்மிடமே உள்ளது என்றும் மிஸ்ராட்டா நகரவாசிகள் தாமே முழுப் பொறுப்பையும் எடுப்போம் என்று குழுக் குழுவாகப் பிரிந்து விவாதம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். பல முஸ்லீம் இனங்கள் வாழும் லிபியாவில் இனி ஆரம்பமாக இருக்கும் அரசியல் எப்பாதை நோகிச் செல்லும் எத்ததைய சவால்களைத் தோற்றுவிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது
« PREV
NEXT »

No comments