Latest News

October 22, 2011

ரா ஒன் படத்தை வெளியிட வேண்டுமானால் ரூ.1 கோடி கோர்ட்டில் செலுத்தவேண்டும். நீதிபதி உத்தரவு
by admin - 0



ஷாரூக்கான் தயாரித்து நடித்துள்ள விஞ்ஞானப் படம் ரா ஒன். இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் பதிப்புரிமை பிரச்சினையில் சிக்கியுள்ளது.

ரா ஒன் படத்தின் கதை தங்களுடையது என யாஷ் பட்நாயக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மொகித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் தால்வி, இந்தப் 
படத்தை வெளியிடும் முன், நீதிமன்றத்தில் ரூ 1 கோடியை ஷாரூக்கான் செலுத்த வேண்டும். அதன் பிறகே வெளியிட வேண்டும். தவறினார் இடைக்காலத் தடை விதிக்க வேண்டி வரும் என்று தீர்ப்பளித்தனர். 



மேலும் தங்கள் தீர்ப்பில், "திரையுலகில் அடுத்தவர் கதையை காப்பியடிப்பது தொடர் கதையாகிவருவது வேதனைக்குரியது," என குறிப்பிட்டுள்ளனர். 


ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த ரோபோ படமும் கதைத் திருட்டு பிரச்சினையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments