Latest News

August 01, 2011

இந்திய சினிமாவுக்கு ரஜினி எப்போதுமே ஸ்பெஷல்தான்! - தீபிகா
by admin - 0

எனக்கு என்னதான் கால்ஷீட் பிரச்சினை இருந்தாலும், ரஜினி சார் படத்துக்கு மட்டும் எப்போது அழைத்தாலும் வருவேன். எந்தப் படத்தின் கால்ஷீட்டையும் அட்ஜஸ்ட் செய்து தருவேன். ரஜினி இந்திய சினிமாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான், என்றார் தீபிகா படுகோன்.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோன். இந்தப் படத்தில் ரஜினியின் மற்ற இரு வேடங்களுக்கு நாயகிகள் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் தீபிகா மட்டும் அறிவிக்கப்பட்டுவிட்டார். ரஜினி உடல்நிலை காரணமாக படத்தின் ஷூட்டிங் கேன்சலாகி, கால்ஷீட் பிரச்சினை வந்த பிறகும் கூட, தீபிகா பொறுமையிழக்கவில்லை.

ரஜினி எப்போது குணமாகி வருகிறாரோ அதுவரை காத்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

இப்போது மீண்டும் அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் நிலையில், அவரை ஷூட்டிங்குக்கு வருமாறு அழைத்துள்ளார் ரஜினி. இதுகுறித்து தீபிகா கூறுகையில், "ராணா ஷூட்டிங் குறித்து கேஎஸ் ரவிக்குமார் தகவல் அனுப்பியுள்ளார். எனக்கு இதை அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

காரணம் இது ரஜினி படம். அவர் எப்போது அழைத்தாலும் ராணா படப்பிடிப்புக்கு வர தயாராக இருக்கிறேன். எனக்காக அவர்களை காத்திருக்க வைக்கவும் மாட்டேன். ராணாவுக்காக எந்தப் படத்தின் கால்ஷீட்டையும் அட்ஜஸ்ட் செய்து தருவேன். ரஜினி இந்திய சினிமாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான்", என்று கூறினார்.

படப்பிடிப்பு துவங்கும் முன், ரஜினிக்காகவும் ராணா படம் சிறப்பாக வரவும் திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளாராம் தீபிகா.
« PREV
NEXT »

No comments