Latest News

August 01, 2011

எதிர்கட்சியாக இருக்க ஆண்மையும், துணிவும் தேவை: நாஞ்சில் சம்பத் பேச்சு
by admin - 0

மன்னார்குடி: யார் வேண்டுமானாலும் ஆளுங்கட்சியாகலாம். ஆனால் எதிர்கட்சியாக இருக்க ஆண்மையும், துணிவும் தேவை என்று மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடி பந்தலடியில் மதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

சேவை, தியாகத்திற்காக இருக்கும் கட்சி மதிமுக. தமிழ் மாநில காங்கிரஸ் முன்பு எதிர்கட்சியாக இருந்தது. ஆனால் இன்று அந்த கட்சியே இல்லை.

மதிமுக தோழமைக் கொண்ட கட்சிகளில் தோழமைக்கு அடையாளமாக இருந்தது அதிமுக தான். ஒரு அரசியல் கட்சி தேர்தலில் கலந்து கொள்ளாமல் கம்பீரமாக இருக்கிறது என்றால் அது மதிமுக தான்.

யார் வேண்டுமானாலும் ஆளுங்கட்சியாகலாம். ஆனால் எதிர்கட்சியாக இருக்க ஆண்மையும், துணிவும் தேவை. திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனைக்கு தீர்வு காண வட்டியில்லா கடனுக்காக நிதி ஒதுக்கியிருப்பதை மதிமுக வரவேற்கிறது.

1 கோடியே 32 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறதே? திருவள்ளுவர் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளார்கள். திருவள்ளுவர் என்ன தவறு செய்தார். விலைவாசி குறைந்துள்ளதா இல்லை மின்வெட்டு தான் ரத்தானதா? பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மக்கள் தேவைகளை நிறைவேற்றுவது தான் நல்ல ஆட்சிக்கு அடையாளம் என்றார்.
« PREV
NEXT »

No comments