பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில், நேட்டோ செய்தி தொடர்பாளரும், படை கமாண்டருமான மைக் பிரேக்கன் கூறுகையில்,
"ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துவங்கும் ரமலான் புனித மாதத்தை முன்னிட்டு, தாக்குதலை, லிபியா தலைவர் கடாபி நிறுத்துகிறாரா; இல்லையா, என்று நேட்டோ படைகள் பார்க்கும். கடாபியின் படைகள் தாக்குதலை நிறுத்தாவிட்டால், தொடர்ந்து நேட்டோ படைகளும் தாக்குதலை மேற்கொள்ளும்,'' என்றார்.
லிபியா மக்களை காப்பாற்றும் வகையில், ஐ.நா., உத்தரவின் பேரில், அந்நாட்டின் மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரமலான் நோன்பின் போது, தாக்குதல் மேற்கொண்டால், முஸ்லிம்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று நேட்டோ படைகள் கருதுவதால், இதுதொடர்பான எச்சரிக்கையை, முன்பே கடாபி அரசுக்கு விடுத்துள்ளது. அதேநேரத்தில், துருக்கி, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன், கடாபியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments
Post a Comment