ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் பிரெஞ்சு இராணு வத்தினரிடம் ஒரு மின்னல் விஜயம் ஒன்றைத் திடீரென பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மேற்கொண்டுள்ளார். 5 மணிநேரம் அங்கு பலரையும் சந்தித்து விட்டுத் திரும்பியுள்ளார்.இந்த விஜயம் பாதுகாப்புக் காரணங்களிற்காக மிகவும் இரகசியமாகவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பிரான்ஸ் இந்த ஆப்கான் நடவடிக்கையில் 2001ம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த நடவடிக்கை Jaques Chirac காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நிக்கோலா சாச்க்கோசி உடனடியாக பிரெஞ்சுப் படைகளின் முண்ணனி நிலைகளான கிழக்குக் காபூலின் நகரமான Tora நோக்கிச் சென்றார்.
படையினரைச் சந்தித்த சார்க்கோசி பின்னர் ஆப்கானில் நடவடிக்கையிலீடுபட்டிருக்கும் நேட்டோ படைகளின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அமெரிக்கத் தளபதி David Petraeus ச் சந்தித்தார். அதன் பின்னர் ஆப்கான் ஜனாதிபதி Hamid Karzaï யையும் சந்தித்தார்.
பிரெஞ்சுப்படைகளின் மீளப்பெறல் கால அட்டவணையை முழுமைப் படுத்த ஜனாதிபதித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து மூன்றாவது தடவையாக ஆப்கான் சென்றுள்ளார் பிரெஞ்சு ஜனாதிபதி.
மேலும் அமெரிக்கா ஆப்கானில் நிலைகொண்டிருக்கும் 33,000 படையினரில் மூன்றிலொரு பங்கு இராணுவத்தை அதாவது 10,000 படையினரை 2011 இறுதியில் மீளப் பெறுகின்றது. மிகுதி முழுப்படையினரும் 2012 கடைசிக்கள் மீளப் பெறப் படுவார்கள். அதன் பின்னர் பிரெஞ்சுப் படைகளின் ஆதிக்கமே அங்கு இருக்கும்.
ஜனாதிபதியின் விமானத்தின் amiral Guillaud இரு வீரர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ஒருவர் பெரும் குண்டு வெடிப்பில் சிக்கிப் பல வகையான காயங்களிற்குள்ளாகியிருப்தாகவும் மற்றையவர் ஒரு குண்டு வெடிப்பின் அருகில் இருந்தமையால் அதன் அதியுச்ச சத்தத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் யார் யாருக்கெல்லாம் ஜனாதிபதியின் விமானத்தில் பயணிக்கும் அல்லது ஜனாதிபதியினால் நலம் விசாரிக்கப்படும் அதிஸ்டம் கிடைக்கப்போகின்றதோ தெரியவில்லை. தேர்தல் என்பது உலகின் எந்தப் பாகத்தில் நடந்தாலும் அரசியல்வாதிகள் என்னமோ ஒரே மாதிரியாகத் தான் நடந்து கொள்கின்றார்கள்.
No comments
Post a Comment