Latest News

July 20, 2011

ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார்.. வேடிக்கையா இல்லை ?
by admin - 0


ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என,கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும்,அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி,போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை.

« PREV
NEXT »

No comments