Latest News

July 15, 2011

எலிகளின் உடம்பில் செயற்கை கல்லீரல் பொருத்திய மருத்துவர்கள்
by admin - 0

பொதுவாக புதிய மருந்துகள் எலிகளை கொண்டே பரிசோதிக்கப்படுவது வழக்கம். அதில் கிடைக்கும் வெற்றி, தோல்வியை பொறுத்தே மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.இந்நிலையில் இத்தகைய ஆய்வுகளுக்கு உட்படுத்தும் எலிகளுக்கு மனித செல்களை கொண்டு உருவாக்கப்பட்ட கல்லீரல் பொருத்தி புதிய மருந்துகளின் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முறையில் மருந்துகள் குறித்த தரம் உடனடியாகவும் துல்லியமாகவும் தெரியவரும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த முறையால் நோய்களுக்கு தீர்வுகாண விரைவில் மருந்து கிடைக்க ஏதுவாகும் என்பதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.

ஆலிஸ் சென் தலைமையில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் சாதனை இது.

இது குறித்து வெளியாகி உள்ள தகவல் பின்வருமாறு: புதிய மருந்து சோதனைக்காக ஹெபடோசைடஸ் என்ற மனித செல்கள் மற்றும் எலிகளின் தோலில் காணப்படும் செல்களை கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட கல்லீரல் எலிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இவற்றின் செயல்பாடுகள் மனித கல்லீரலைப் போன்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் புதிய மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மரபணுக்கள் குறித்த மருத்துவ ஆய்வுகளுக்கும் இது பேருதவியாக இருக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments