இதனால் நயன்- பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா- ரமலத்துக்கும் விவாகரத்துக் கிடைத்துவிட்டது. விவாகரத்து பெற்ற கையோடு, நயனை 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
அதே சமயம் தெலுங்கில் முன்புகமிட் ஆகியிருந்த “ஸ்ரீ ராம ராஜ்யம்” என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான் சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம்.
மாலை 6 மணிக்கு சூட்டிங் முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியாவிடைபெற்றார்.
.
No comments
Post a Comment