பிரபல பத்திரிக்கையான தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் உலகில் வாழ்வதற்கு ஏற்ற மற்றும் மோசமான நகரங்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பு சுகாதாரம், கலாசாரம், சுற்றுச்சூழல், கல்வி, தனி நபர் பாதுகாப்பு உள்ளிட்ட 30 விஷயங்கள் அடிப்படையில் நடத்தப்பட்டது.
இதில் மோசமான 10 நகரங்களில் இலங்கை தலைநகர் கொழும்புவும் ஒன்று.
மோசமான நகரங்கள் விவரம் வருமாறு,
ஹராரே (ஜிம்பாப்வே), தாகா (பங்களாதேஷ்), போர்ட் மோர்ஸ்பி (பாபுவா நியூ கினியா), லாகஸ் (நைஜீரியா), அல்ஜீயர்ஸ் (அல்ஜீரியா), கராச்சி (பாகிஸ்தான்), தௌவாலா (காமரூன்), தெஹ்ரான் (ஈரான்), தாகர் (செனிகல்), கொழும்பு (இலங்கை).
வாழத் தகுதியான 10 நகரங்கள்:
வான்கூவர் (கனடா), மெல்போர்ன் (ஆஸ்திரேலியா), வியன்னா (ஆஸ்திரியா), டொரண்டோ (கனடா), கால்காரி (கனடா), ஹெல்சிங்கி (பின்லாந்து), சிட்னி (ஆஸ்திரேலியா), பெர்த் (ஆஸ்திரேலியா), அடிலெய்ட் (ஆஸ்திரேலியா), ஆக்லேண்ட் (நியூசிலாந்து).
கடந்த 2010-ம் ஆண்டில் இதே பத்திரிக்கை தான் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இலங்கை என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment