உலக வரைபடத்தில் புதிய நாடொன்று குறிக்கப்படவுள்ளது... தனிநாடு கேட்டு போராடிய மக்களுக்கு கிடைத்து விட்டது வரலாற்று வெற்றி.... ஆம்... சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு இன்று உதயமாகிறது.
இதற்காக முதல் சுதந்திர தின விழா தெற்கு சூடான் நாட்டின் ஜூபா நகரில் கொண்டாடப்படவுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் மிகப்பெரிய நாடு சூடான். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது.
ஐந்து தசாப்தங்களாக தீவிரமாக இடம்பெற்ற கொரில்லா யுத்தம், அதன் பலனாக இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள்... கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி பேச்சவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
புதிய ராணுவ வீரர்கள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக தீவிர ஒத்திகையில் ஈடுபட்டனர். இரு நாடுகளின் எல்லையாக அபைய், தெற்கு கோர்டோபான் நகரங்கள் பிரிக்கப்பட்டன. தெற்கு சூடான் நாடு உதயமாவதற்கு , அதிபர் பஷீர் அல்-ஆசாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment