Latest News

July 09, 2011

குழந்தையான பராக் ஒபாமாவை தத்துக் கொடுக்க அவரது தந்தை திட்டமிட்டிருந்தார் _
by admin - 0

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தந்தை அவரை தத்துக் கொடுக்க இருந்தமை புதிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. 

தனது மனைவியான ஆன் இன்ஹாம் 5மாத கர்ப்பமாக இருந்த போது ஒபாமாவின் தந்தை பிறக்கப்போகும் குழந்தையை தத்துக் கொடுக்கப் போவதாக குடிவரவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

பல பெண்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பராக் ஒபாமாவின் தந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட குடிவரவு அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

1960 களில் கறுப்பினத்தவரான ஒபாமாவின் தந்தையை மணந்த 18 வயது யுவதியான ஆன் கூன்ஹாம் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை கைவிட வேண்டும் என கடும் நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகின்றது. 

அச்சமயம் அவர்கள் வாழ்ந்த ஹவாயில் கலப்பின திருமணங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந் போதும் அமெரிக்காவின் ஏனைய 22 மாநிலங்களில் அத்தகைய திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டமை காரணமாக கலப்பின திருமணம் மூலம் பிறக்கும் குழந்தை ஒபாமாவை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
« PREV
NEXT »

No comments