Latest News

July 23, 2011

டயானா மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணை
by admin - 0


  இங்கிலாந்து இளவரசி டயானா 1997-ம் ஆண்டு பெரீஸ் நகரில் காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இந்த விபத்தில் சதி ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக பெரீஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இந்த விசாரணையில் மரணம் இயற்கையானது தான் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டு போலீஸ் அதிகாரிகள் 2 பேர் தாங்கள் டயானா மரணம் குறித்த முக்கிய ஆவணங்களை நீதிமன்ற விசாரணையில் இருந்து மறைத்துவிட்டோம் என ஒரு பத்திரிகை நேர்காணலில் தெரிவித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த விசாரணை பெரீஸ் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் நீதிபதி ஜெரார்டு கட்டியோ ஸ்காட்லாந்து யார்ட் போலீஸ் முன்னாள் தலைவர் லார்டு கான்டோன், முன்னாள் உதவி கமிஷனர் சர் டேவிட் வெனீஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து ஏன் முக்கிய ஆவணங்களை கோர்ட்டு விசாரணையில் இருந்து மறைத்தீர்கள் என்று விசாரிக்க இருக்கிறார்.

பிரான்சு நாட்டு சட்டப்படி சாட்சியங்களை மறைப்பது குற்றம் ஆகும். அந்த குற்றத்துக்கு 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 
« PREV
NEXT »

No comments