Latest News

July 23, 2011

நார்வே நாட்டில் கொடூரம் 80 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதி குண்டுவெடிப்பில் , 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
by admin - 1


நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று அந்த கட்டிடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். அதில், 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது பிரதமர் ஜெனஸ் ஸ்டோல் டன்பெர்க் அலுவலகத்தில் இல்லை. அதனால் அவர் உயிர் தப்பினார்.   குண்டு வெடித்தபோது அந்த 20 மாடி அரசு கட்டிடம் இடிந்து நொறுங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறியது. கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி, ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதி கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. காயம் அடைந்த மக்கள் ரத்த காயத்துடன் ரோடுகளில் ஓடினர்.
 
இதனால் அந்த பகுதி முழுவதும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.   இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ புறநகர் பகுதியில் உள்ள யுடோயா தீவில் பிரதமரின் ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாமில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீஸ் உடையில் ஒரு தீவிரவாதி அங்கு வந்தான். அவன் ஒரு கைதுப்பாக்கி, தானியங்கி துப்பாக்கி மற்றும் ஒரு சிறிய ரக துப்பாக்கி என 3 ரக துப்பாக்கிகளை வைத்திருந்தான். அவன் முகாமில் கலந்து கொண்ட வாலிபர்கள் மீது சரமாரியாக சுட்டான்.  
 
அதில் இருந்து தப்பிக்க வாலிபர்கள் அங்குமிங்கும் ஓடினர். பலர் கடலுக்குள் குதித்தனர். ஆனால் அவர்களை விரட்டி விரட்டி ஆவேசத்துடன் சரமாரியாக சுட்டான். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இன்று காலை சாவு எண்ணிக்கை அதிகரித்தது. துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க ஓடியவர்களின் பிணங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பல உடல்கள் குண்டு காயத்துடன் தண்ணீரில் மிதந்தன. துப்பாக்கி சூட்டில் மட்டும் 80 பேர் உயிர் இழந்துள்ளனர்.
 
மேலும் ஏராள மானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.   போலீஸ் உடையில் வந்து இளைஞர்கள் முகாமில் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு ஆகிய 2 சம்பவங்களிலும் இவனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இளைஞர் முகாமிலும் பிரதமர் கலந்து கொள்வதாக இருந்தது. எனவே, அவரை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
அதற்கான காரணம் குறித்து அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   ஆனால், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு ஜெனஸ் ஸ்டால் டன்பெர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
« PREV
NEXT »

1 comment

Nalliah said...

அண்மையில் நோர்வேயில் நடந்த குண்டுவெடிப்பும் படுகொலையும் ஐரோப்பாவை மட்டுமல்ல முழு உலகத்தையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. அல்கைதா தான் இந்த உலகின் ஒரே பயங்கரவாதிகள் என்ற மேற்கத்திய ஊடகங்கள் இதுவரை பரப்பி வந்த பூச்சாண்டிக் கதைகளை இது தகர்த்துள்ளது. தமது சொந்த மக்களைச் சுரண்டவும், மூன்றாம் உலக நாடுகளை சூறையாடவும் திரைமறைவில் நிறவெறியைக் கக்கி, இஸ்லாமிய எதிர்ப்பை முன்னிறுத்தித்தான் மேற்குலகில் தேர்தலில் வென்று ஆட்சி நடாத்துகின்றார்கள். .
நோர்வேயில் குண்டுவெடிப்பும் படுகொலையும் நடந்தவுடன், இஸ்லாமிய பயங்கரவாதம்தான் அதற்கு காரணம் என மேற்குலக கிறிஸ்தவ ஊடகங்கள் செய்திகள் பரப்பின. படுகொலைகளை நடாத்திய பயங்கரவாதி பிடிபட்டபின் இந்தப் பயங்கரவாதியை உருவாக்கியது மேற்கத்திய ஆட்சியாளர்கள்தான் என்ற உண்மையை மூடிமறைத்து இந்தப் பயங்கரவாதத்தை தூண்டியதற்கு தாங்கள் பாத்திரவாளிகள் அல்ல என்று நம்பவைப்பதற்காக தற்போது இதனை தனிப்பட்ட ஒருவரின் கொடூரமான செயலாக, வழிதவறிய மந்தையின் செயலாக, மேற்கத்திய கிறிஸ்தவ ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. படுகொலைகளை நடாத்திய பயங்கரவாதி ஒரு மனநோயாளியாக இருக்கலாம் என்று கூட இந்த மேற்கத்திய கிறிஸ்தவ ஊடகங்கள் ஊகங்களை வெளியிடுகின்றன.
நல்லையா தயாபரன்