Latest News

July 01, 2011

கூகுள் நிறுவனர்களை பின்னுக்குத் தள்ளிய ஜூக்கர்பெர்க்!
by admin - 0

கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜை விட இன்று பெரிய பணக்காரராக மாறியுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்.

இன்று அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர். கூகுள் நிறுவனர்களின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள்தான்.

இதன் மூலம் டெக்னாலஜி வர்த்தக உலகின் 3 வது பெரிய பணக்காரராக மாறியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

ஜிஎஸ்வி கேபிடல் கார்ப் நிறுவனம் பேஸ்புக்கில் 225000 பங்குகளை தலா 29.28 டாலருக்கு வாங்கியதன் மூலம் இந்த புதிய அந்தஸ்தை ஜூக்கர்பெர்க் பெற்றுள்ளார்.

இதன் மூலம் போஸ்புக்கின் இன்றைய மதிப்பு 70 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் அதிக சொத்துமதிப்பு கொண்டவர் என்ற முறையில் இன்றும் முதலிடம் வகிப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்தான். அவரது சொத்துமதிப்பு 56 பில்லியன் டாலர்கள்.
« PREV
NEXT »

No comments