112 பயணிகள் மற்றும் விமானிகள், விமான சிப்பந்திகளுடன் கின்சாசாவில் இருந்து நேற்று அந்த விமானம் கோமா நகருக்கு சென்று கொண்டிருந்தது. வழியில் கிசாங்கினி நகரில் அந்த விமானம் தரையிறங்க முயன்றது.
கன மழைக்கு இடையே தரையிறங்க முயன்ற அந்த விமானம் விமான நிலையத்துக்கு சிறிது தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் 72 பேர் பலியாயினர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
போயிங் 727 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் ஹெவா போரா விமான நிறுவனத்துக்கு சொந்தமானது.
No comments
Post a Comment