Latest News

July 15, 2011

பில்லா - 2 படப்பிடிப்பு தொடக்கம்
by admin - 0

ரூ. 35 கோடி பட்ஜெட்டில் அஜீத் நடிக்கும் ”பில்லா -2” படம் நேற்று தொடங்கியது.
சக்ரி டோலட்டி இயக்கும் இந்த படம், முன்பு வெளியாகி வெற்றி பெற்ற ”பில்லா”
படத்துக்கு முந்தைய கதையமைப்பைக் கொண்டதாகும்.
billa
ஹதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் சூட்டிங்கில் அஜீத், நாயகி ஹ்யூமா குரேஷி உள்ளிட்டோர் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றனர்.
ரூ.35 கோடி செலவில், இந்துஜா குழுமம் மற்றும் வைட் ஆங்கில் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
”மதராசபட்டணம்” புகழ் செல்வகுமார் கலையை கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏப்ரல் 2012 ல் இந்தப் படம் வெளியாகும் என்கிறார்கள்.
அஜீத்தின் பொன்விழாப் படமான ”மங்காத்தா” அடுத்த மாதம் வெளியாகிறது.

« PREV
NEXT »

No comments