Latest News

June 13, 2011

மாவீரன்
by admin - 0


தெலுங்கில் வெளியாகி, வெற்றி பெற்ற "மகதீரா" படத்தை தமிழில் "மாவீரன்" என பெயர் சூட்டி, மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
ராம்சரண் நாயகனாக கம்பீரமாக நடித்துள்ளார். சில நூற்றாண்டுகளுக்கு முன், ராஜ குடும்பத்தில் பிறந்த நாயகன் ராம் சரண் - நாயகி காஜல் அகர்வால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து இறக்கிறார்கள்.
vivasaayi
முந்தைய ஜென்மத்தில் காதலித்தவர்கள் இந்த ஜென்மத்தில் இணைகிறார்களா என்பதை கிராபிக்ஸ் வித்தைகள், பிரமாண்டத்தோடு சொல்லியிருக்கிறார்கள். அந்தகால மன்னர் கால வேடத்தில் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். வில்லனாக தேவ்கில், நாயகன் ராம்சரனின் காதலியான காஜலை இணைத்து கொள்ள துடிக்கிறார். இருவரும் பலத்தை காட்டி மோதுகிறார்கள்.
மன்னர் சேர்கானுடன் (ஸ்ரீஹரி) சேர்ந்து சதி திட்டம் தீட்டுகிறார். சேர்கான் படையுடன் ராம்சரண் தனியாளாக மோதுகிற காட்சி படத்துக்கு பலம் சேர்க்கிறது. நூற்றுக்கும் அதிகமானவர்களை ராம்சரண் வெட்டி சாய்த்து, வீரதீர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

காஜல் அகர்வால் அழகு பொம்மையாக வருகிறார். "ஆசை ஆசை" என்ற மீண்டும் கேட்கத் தூண்டும் பாடலில் காஜல், ரசிகர்களின் மனம் கவர்வார். முதல் பாடலில் ராம்சரண் - முமைத்கான் - சிரஞ்சீவி மூன்று பேரும் அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள். கிம் சர்மாவும் ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாட்டம் போட்டுவிட்டு போகிறார்.
யதார்த்தமான காட்சியமைப்பு, லாஜிக் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ரசிக்க தக்க வகையில் முன் ஜென்ம காதல் காவியத்தை கொடுத்துள்ளார் டைரக்டர் ராஜ மௌலி.
மாவீரன் - பிரமாண்டமாக நிற்கிறான்.
நடிகர்கள்: ராம்சரண், தேவ்கில், ஸ்ரீஹரி, சரத்பாபு, பிரமானந்தம், சுனில், சூர்யா, ராவ் ரமேஷ், சுப்பாரய்யா, சர்மா
நடிகைகள்: காஜல் அகர்வால், முமைத்கான், கிம்சர்மா, ஹேமா
சிறப்பு தோற்றம்: சிரஞ்சீவி

இசை: மரகதமணி
பாடல்கள்: கவிஞர் வாலி, ஜெயராம்
எடிட்டிங்: வெங்கடேஸ்வரா ராவ் கோத்தகிரி
கலை: எஸ்.ரவீந்தர்
நடன இயக்குனர்: பாபா பாஸ்கர், சிவசங்கர், நோபல், பிரேம் ரக்சத்
ஒளிப்பதிவு: செந்தில்குமார்
வசனம்: கே.பாக்யராஜ்
சண்டை பயிற்சி: பீட்டர் ஹெயின்
பீ.ஆர்: நிகில்
தயாரிப்பு: அல்லு அரவிந்த்
இயக்கம்: எஸ்.எஸ்.ராஜமௌலி
« PREV
NEXT »

No comments