Latest News

June 17, 2011

பசிக்கு "மண்' சாப்பிட்ட கொடுமை:
by admin - 0

பசியை போக்க மண்ணை சாப்பிட்ட கூலி தொழிலாளிக்கு உணவும், பணமும் தந்து உதவினர், தேனி மக்கள். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் குருசாமி(45). இவர் தேனி மாவட்டம் முத்தாலம்பாறையில் தோட்ட கூலியாக வேலை பார்த்துள்ளார். அங்கு, அவருக்கு சம்பளமும் தரவில்லை. சாப்பாடும் போடவில்லை. வேறுவழியின்றி சொந்த ஊரில் குடும்பத்துடன் சேர, அங்கிருந்து நடந்தே கிளம்பினார்.
கொடுமை: நேற்று மதியம் தேனி வந்த போது, பசி வயிற்றை கிள்ளியது. யாசகம் கேட்க மனமில்லை. ரோட்டோரத்தில் கிடந்த மணலை சாப்பிட துவங்கினார். அப்பகுதி பொதுமக்கள் சிலர் இதை பார்த்து வேதனையடைந்தனர். அவருக்கு அன்பு காட்டி, சாப்பாடு வாங்கி தந்தனர். ஊருக்கு செல்ல பணமும் கொடுத்து உதவினர். குருசாமி கூறுகையில்,"பல நாட்களாக சாப்பிடவில்லை. மயக்கம் வருவது போல் தோன்றவே, என்ன செய்கிறேன் என தெரியாமலேயே மண்ணை சாப்பிட்டேன்,'என்றார். மருத்துவக்கல்லூரி மனநல டாக்டர் ரமேஷ் பூபதி கூறுகையில், "மனரீதியாக பாதிக்கப்பட்ட நிலையிலோ, விரக்தி காரணமாகவோ குருசாமி மண்ணை சாப்பிட்டிருக்கலாம். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் கவுன்சிலிங் செய்தால், இதுபோல் மீண்டும் செய்யாமல் தடுக்கலாம்,'என்றார்.
« PREV
NEXT »

No comments