Latest News

June 16, 2011

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்... உடம்பை பாத்துக்கங்க! - கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி
by admin - 0

 மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். தான் பூரண நலமடைந்துவிட்டதாக தெரிவித்த அவருக்கு, கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தார். மேலும் சில வழக்கமான சோதனைகள் இருப்பதால் சிங்கப்பூரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.அப்போது தமிழகம் காப்பாற்றப்பட்டமைக்காக நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அடுத்து திமுக தலைவர் கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார். தமது உடல் நலம் குறித்தும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கலைஞரிடம் தொலைபேசியில் ரஜினிகாந்த் விவரித்தார்.

உடல்நலம் தேறி ரஜினி விரைவில் சென்னை திரும்ப மனமாற வாழ்த்துவதாகவும், மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் கருணாநிதி வாழ்த்தினார்.

அவருக்கு பதிலளித்த ரஜினி, "வாழ்க்கையில் நீங்கள் பார்க்காத ஏற்றத்தாழ்வுகள் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல், உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம்," என்றார் ரஜினி.
« PREV
NEXT »

No comments