Latest News

June 18, 2011

மக்கள் இயக்கம் துவங்கும் சூர்யா!
by admin - 0


விரைவில் மக்கள் இயக்கம் துவங்குவேன் என நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். தனது அறக்கட்டளை சார்பில் நடந்த கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்தார்.

பிலிம் சேம்பரில் நடந்த இந்த விழாவில் அவர் பேசுகையில், "சமூக சேவை பணிகள் செய்வதற்கு என் தந்தை சிவகுமார் தூண்டு கோலாக உள்ளார். 32 வருடங்களாக ஏழைகளுக்கு அவர் உதவிகள் வழங்கி வருகிறார். 25 வருடங்களுக்கு முன்பு அப்பொறுப்பை நான் ஏற்றேன்.

எதிர்காலத்தில் இது மேலும் விரிவுபடுத்தப்படும். அடித் தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முடிந்த பணிகளை செய்வோம்.

எங்கள் அறக்கட்டளை மூலம் பண உதவி மட்டுமின்றி மாணவர்கள் சமூகத்தை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ள தேவையான பயிற்சிகளையும் நிபுணர்கள் உதவியோடு செய்து வருகிறது.

இதை எதிர்காலத்தில் தன்னார்வலர்களின் உதவியோடு மக்கள் இயக்கமாக மாற்றும் எண்ணமிருக்கிறது," என்றார்.

ஏற்கெனவே நிதி உதவி என்று ஆரம்பித்து, இப்போது மக்கள் இயக்கம், அடுத்து அரசியல் இயக்கம் என்று வந்து நிற்கிறார் நடிகர் விஜய். இப்போது கிட்டத்தட்ட இதே பாணியில் மக்கள் இயக்கம் துவங்கத் தயாராகிவருகிறார் சூர்யா.
« PREV
NEXT »

No comments