Latest News

May 05, 2011

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
by admin - 0

 ரஜினிகாந்த மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படப்பிடிப்பு துவங்கிய ஏப்ரல் 29 அன்று  ரஜினிமுதலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு குணமடந்ததாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அது நடந்து ஒரு வாரத்திற்க்குள்ளாகவே  ரஜினி நேறறு மூச்சு திணறலால் அவதிப்பட்டார். ராணா படப்பிடிப்பில் இருந்த அவரை உடனே இஸ்பெல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ரஜினியின் நிலை தேறியிருப்பதாகவும் அவர் ஸ்டேபிளாக இருப்பதாகவும் மூச்சு சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐசியுவில் இரண்டு நாட்கள் ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என இசபெல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்க தீபிகாபடுகொனெ அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படப்பிட்டிப்பு ஆரம்பித்த அன்றிலிருந்தே ரஜினிக்கு ஹெல்த் பிரச்சினைகள் ஆரமபமாகியிருப்பதால் ராணா திட்டப்படி நிறைவு பெறுமா என கேள்விகள் எழுந்துள்ளன. கோடிக்கான ரஜினி ரசிகர்கள் மீண்டும் தங்கள் தலைவர் ஆக்டிவாக எழுந்து வர பிரார்த்திக்கிறார்கள்
« PREV
NEXT »

No comments