
1904 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட Poincare conjecture theorem இதுவரை கணித உலகில் தீர்க்கப்படாத ஒரு புதிராக காணப்பட்டது. அதாவது துளையில்லாத எந்தவொரு முப்பரிமாண உருவத்தையும் ஒரு கோளமாக ஆக்க முடியும் என்று முன்வைக்கபட்ட வாதத்தை கணித ரீதியாக நிரூபிப்பது.
சொல்றதுக்குத்தான் இது இலகுவாக இருக்கிறது. ஆனால் அதை தீர்க்க முயன்று எத்தனையோ பேர் தோற்று போயிருக்கிறார்கள்.
ஆனால் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டு Grigory Perelma இதற்கான இரண்டு நிறுவல்களை வெளியிட்டார். அதை சரியான நிறுவல் என அடையாளம் காண கணிதவியலாளர்களுக்கு 7 வருடங்கள் சென்றது..!!! அதை கடந்த வருடம் சரியான நிறுவல் என அறிவித்து Grigoryக்கு 1 மில்லியன் டோலர் பரிசும் கணிதவியலாளர்களின் நோபல் எனப்படும் பீல்டஸ் மெடலையும் கொடுத்தார்கள்.
ஆனால் அவர் அந்த பணப்பரிசை ஏற்க மறுத்துவிட்டார்...!!! அதற்கு அவர் கூறிய காரணம்..
"வெறுமை இந்த உலகத்தின் எல்லா மூலையிலும் உள்ளது... அதை நாங்கள் கணிக்கவும் இயலும். இது எங்களுக்கு பல வாய்ப்புக்களை அளிக்கிறது. இந்த அண்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று எனக்கு தெரியும்போது ஏன் 1 மில்லியனுக்கு பின்னால் ஓடவேண்டும்...?"..
இவன் கிறுக்கன் என்று உங்களில் சிலர் கூறுவது போல உள்ளது.. ஆனால் என்னைப் பொறுத்தவரை இவருக்கு சிலை வைக்க வேண்டும்...
இதில் இன்னும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால்.. இவரிடம் நீங்கள் இதை எப்படித் தீர்த்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்...
"பைபிளில் யேசு நீரில் நடந்தார் என்று கூறப்பட்டது. அவர் அவ்வாறு நீரில் மூழ்காமல் நடப்பதற்கு என்ன வேகத்தில் நடந்திருப்பார் என்று யோசித்தேன் விடை வந்தது..."
ஆனால் தற்போது ஊடகவியலாளர்களிடம் இருக்கும் மில்லியன் டொலர் கேள்வி..
"இவரிற்கு நிகங்களையோ தலைமயிரையோ வெட்டும் பழக்கம் உண்டா..??"
இப்படியும் சில மனிதர்கள்....
(நன்றி :- டைம் இணையதளம்)
No comments
Post a Comment