Latest News

May 11, 2011

ஒசாமா மீதான தாக்குதல் குறித்து இந்தியாவிற்கு முன்னதாகவே தெரியும்
by admin - 0


ஒசாமா மீதான தாக்குதல் குறித்து இந்தியாவிற்கு முன்னதாகவே தகவல்கள் அனுப்பப்பட்டு விட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மீது அமெரிக்க படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒசாமா பலியானார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகில் நடந்த இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டிற்கே கூட தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தாக்குதல் குறித்து முன்னதாகவே இந்தியாவிற்கு அமெரிக்கா தகவல்களை அனுப்பியுள்ளதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்து இந்தியா அதிக ஆர்வம் காட்டியதாகவும், ஒசாமாவின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னதாக இதுகுறித்து இந்தியாவிற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
« PREV
NEXT »

No comments