Latest News

May 04, 2011

நடிகை அபர்ணா திருமணம்
by admin - 0


"புதுக்கோட்டையிலிருந்து சரவணன்", "ஏபிசிடி" போன்ற படங்களில் நடித்தவர் நடிகை அபர்ணா. சினிமாவில் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது கல்வி நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாக இருக்கும் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.  
மணமகன் பெயர், கே.பரணி. பூந்தமல்லியில் உள்ள சுந்தர் திரையரங்கின் உரிமையாளரான கண்ணப்பனின் மகன். பரணி, `எம்.எஸ்.' பட்டம் பெற்ற டாக்டர் ஆவார். சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார்.

இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி சுந்தர் தியேட்டரின் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் பரணிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. பரணி டாக்டராக இருக்கிறார். இவர் சென்னையில் எலும்பு முறிவு சிகிச்சையில் நிபுரணராக உள்ளார்.

இவர்களது திருணம் சென்னை வானகரம், ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் வருகிற ஜூன் 29ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் ஜூன் 8ம் தேதி தி.நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற இருக்கிறது.

திருமணம் முடிந்த மறுநாள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ராமநாதன் செட்டியார் ஹாலில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.
« PREV
NEXT »

No comments