லோப்தாங் பகுதியில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவை அழுகிய நிலையில் இருந்தது.
இதை உள்துறை அமைச்சர் சிதம்பரமும் உறுதி செய்துள்ளார். ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் உடலா? என்பது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த சனிக்கிழமை மாநில தலைநகர் இடாநகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தவாங் என்ற இடத்தில் இருந்து இடா நகருக்கு ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்.
அவருடன் இரு விமானிகள் உள்பட மேலும் 4 பேர் பயணம் செய்தனர். தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் அந்த ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. முதல் மந்திரியின் ஹெலிகாப்டர் மாயமான தகவல் அறிந்ததும், அதை தேடி கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
தரைவழி மற்றும் வான்வழியில் சென்று தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டன. அவரை தேடும் பணி 5வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் தவான் மாவட்டத்தில் உள்ள லோப்தாங் என்னும் இடத்தில் விபத்துக்குள்ளானது என்பது தெரிய வந்துள்ளது. அங்கு ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்களை தேடுதல் படையினர் கண்டுபிடித்தனர்.
அந்த இடத்தில் அழுகிய நிலையில் உடல்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த உடல்களை தேடுல் படையினர் மீட்டு பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment