Latest News

May 11, 2011

மதுபானத்தை நல்ல முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்..
by admin - 0

அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 62 வயதான மிக்கி நில்சன் என்ற முதியவரொருவர் மதுபானத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி ஓடக்கூடிய கார் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

இக்காரானது பழைய தேவையற்ற கழிவுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாத உழைப்பின் பின்னர் இக்கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இது வெள்ளை மாளிகையின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஒபாமா இத்தகைய முயற்சிகள் நாட்டினரை பெருமிதம் கொள்ளச் செய்வதாகவும், இதனால் எதிர்காலங்களில் எரிபொருட்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தேவை குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
« PREV
NEXT »

No comments