Latest News

May 11, 2011

குக்கருக்குள் தலையை விட்ட 3 வயது குழந்தை
by admin - 0

புதுடில்லி : டில்லியில் 3 வயது குழந்தை ஒன்று ஹெல்மட் என நினைத்துக் கொண்டு பிரசர் குக்கருக்குள் தலையை விட்டது. ஆனால் குக்கரை திரும்ப அகற்ற முடியவில்லை, குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த பெற்றோர் பதறிப்போயினர். உடனடியாக 3 வயது குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் குக்கரை குழந்தையின் தலையில் இருந்து அகற்ற முயன்று முடியாமல் ‌போனதால், வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர். உடனே குழந்‌தையுடன் டில்லி பிதாம்புரா பகுதியில் இருக்கும் பக்வான் சிங் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு 12 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குழந்தையை பத்திரமாக மீட்டனர். ரம்பம், ஸ்க்ரூ டிரைவர் போன்ற உபகரணங்களின் உதவியுடன் குக்கர் அகற்றப்பட்டது.

« PREV
NEXT »

No comments