Latest News

April 30, 2011

இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கப்பல் ரோமில் கண்டுபிடிப்பு
by admin - 0

ரோமானிய பேரரச காலத்திற்குரிய சுமார் 2 ஆயிரம் வருடங்கள் பழைமையான கப்பலொன்று ரோமின் புராதன ஒஸ்டியா துறைமுகத்திற்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதிப்புணரமைப்பு நடவடிக்கைகளின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலானது சுமார் 11 மீற்றர் நீளமானதாகும், மேலும் இதுவரை குறித்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன கப்பல்களில் மிகவும் பெரியதாகக் கருதப்படுகின்றது.

இதன் முன்பகுதியும் பின்பகுதியும் சிதைவடைந்து விட்டதாக இதனைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இக்கண்டுபிடிப்பானது மிகவும் முக்கியமானதொரு நிகழ்வெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒஸ்டியா எண்டிகா என்றழைக்கப்படும் இத்துறைமுக நகரமானது 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும். __
I Have Found It (Kandukondain Kandukondain)
« PREV
NEXT »

No comments